நத்தம் பட்டா சிட்டா ஆன்லைன் தமிழ்நாடு

நத்தம் பட்டா சிட்டா ஆன்லைன் தமிழ்நாடு ( natham patta chitta online tamilnadu download apply view ) - முதலில் நத்தம் என்பது என்ன என்று நமது தமிழ்நிலம் கோ இன் இணையதளப்பக்கத்தில் காணலாம். நத்தம் என்பது கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஏற்றவாறு உள்ள மனைப்பிரிவின் ஒரு வகை ஆகும்.

இதில் பெரும்பாலும் அரசு ஒதுக்கியுள்ள நிலங்கள் தான் இந்த நத்தம் நிலங்கள் ஆகும். இதனை ஊர் நத்தம் மற்றும் கிராம நத்தம் என்றும் அழைக்கலாம். இவ்விரண்டுமே ஒன்று தான்.

இதையும் படிக்கலாமே: பட்டா சிட்டா பாக்கணும்

மனைப்பிரிவு ( வீடுகள் கட்ட ஏதுவான நிலம் ), விளை நிலங்கள் ( விவசாயம் செய்ய ஏதுவான நிலம் ) போன்றவை மட்டுமே அரசாங்கம் ஆட்சேபணை இல்லாத நிலங்கள் ஆகும். அதாவது அரசாங்கம் இந்த நிலங்களை கையகப்படுத்தாது என அர்த்தமாகும்.

மற்ற நிலங்கள் பெரும்பாலும் புறம்போக்கு வகையினை சேர்ந்தவைகளாக இருக்கும். உதாரணமாக மேய்ச்சல் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு, கல்லாங்குத்து புறம்போக்கு என பத்திற்கும் மேற்பட்ட புறம்போக்கு நிலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றினை ஒவ்வொன்றாக வகைப்படுத்தி தனி பதிவேடுகளாக கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

மேற்கண்ட புறம்போக்கு நிலங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இதில் அரசாங்கமானது அவர்களுக்கு தேவையான செயல்களை செய்து கொள்ளும். உதாரணமாக ரயில் தண்டவாளம், பள்ளிக்கூடம், கல்லூரி, மற்ற அரசாங்க அலுவலகம் மற்றும் இதர பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் கட்டிடங்கள் அனைத்தும் அரசாங்கமானது அந்த இடங்களில் கட்டிக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: TamilNilam

இதில் மக்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுதல், வணிக கடைகள் வைத்தல் போன்றவை செய்தல் கூடாது. இதில் அரசாங்கமானது நத்தம் புறம்போக்கிற்கு மட்டும் ஒரு விதி விலக்கு அளித்துள்ளது. அது என்னவென்றால் அந்த இடங்களில் ஏற்கனவே வீடு கட்டி இருந்தால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தகுந்த ஆவணங்கள் ஏதாவது இருப்பின் அதனை வருவாய்த்துறையில் சமர்ப்பித்து பட்டா வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் இதில் வீடுகள் கட்டி இருப்பவர்களுக்கு பத்திரம் அல்லது பட்டா இவைகளில் ஏதாவது ஒன்று மட்டுமே இருக்கும். அவர்கள் வருவாய் துறையில் சம்பந்தபட்ட அரசாணைகளை அவ்வப்போது தெரிந்து கொண்டு ஆவணங்களை வாங்க முயற்சி செய்யுங்கள். தமிழ்நாடு அரசாணை செய்திகளை அவ்வப்போது தெரிந்து கொள்ள tn.gov.in வெப்சைட்டினை காண்டாக்ட் செய்யலாம்.

வாசகர்களின் கேள்விகள்

1. தொடர்ந்து பல வருடங்களாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்றோம். பட்டா எப்படி பெறுவது ?

பல வருடங்களாக வசிக்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சியாக வீட்டு வரி ரசீது, மின்சார கட்டண ரசீது, பத்திரம் போன்றவைகளை கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வி ஏ ஓ அவர்கள் அது ஆட்சேபனை இல்லாத நிலம்தானா என உறுதிப்படுத்தி அதனை சரிபார்த்து வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைப்பார். அவர் அதனை உறுதிசெய்துவிட்ட பின்னர் மண்டல துணை வட்டாட்சியர் அவர்களிடம் பரிசீலினை செய்த பின்னர் இறுதியாக தாசில்தார் அவர்களிடம் செல்லும். அவர் அதனை சரிபார்த்த பின்னர் ஓரிரு மாதங்களில் உங்கள் பட்டா உங்களுக்கு சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்வார்.

இதையும் படிக்கலாமே: Tnreginet. gov. in Patta

2. சமீபத்தில் வெளியான தமிழ்நாடு அரசாணை படி நத்தம் உள்ள நிலங்கள் யாவும் ஆன்லைனில் ஏற்றி விட்டதென்றும் கூறுகிறார்களே அது உண்மையா ?

நிச்சயம் உண்மை. பல வருட போராட்டங்களுக்கு இடையில் நத்தம் புறம்போக்கு நிலங்கள் அனைத்தும் ஆன்லைனில் ஏற்றிவிட்டார்கள். இதனால் பட்டா நகல், பத்திரம் நகல், வில்லங்கம் என பல்வேறு ஆவணங்களின் நகல்கள் எளிமையாக எடுத்து கொள்ள முடியும்.

3. வீட்டிலிருந்தபடியே எனது பட்டா நகலை எடுக்க முடியுமா ?

நிச்சயம் முடியும். நீங்கள் Eservices.tn.gov.in இணையத்தளம் சென்று பட்டா சிட்டா விவரங்களை பார்க்க என்கிற navigation யை தேர்வு செய்து உங்கள் பட்டா கிராமம், மாவட்டம், பட்டா அல்லது சர்வே எண், உட்பிரிவு எண் மற்றும் அங்கீகார மதிப்பு போன்றவைகளை உள்ளீடு செய்தால் பட்டா நகல் திரையில் காண்பிக்கும். அதனை மிகவும் எளிமையாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

4. ஆன்லைனில் எனது நத்தம் நிலம் ஏறவில்லை. நான் என்ன செய்வது ?

அனைத்து விதமான நத்தம் நிலங்கள் ( விளை நிலங்களை தவிர்த்து ) யாவும் ஆன்லைனில் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய நத்தம் நிலம் ஏறவில்லை எனில் உங்கள் வருவாய் கிராமம் சென்று வி ஏ ஓ விடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

5. ஆன்லைனில் நத்தம் நிலம் ஏறவில்லை. ஆனால் பத்திரமும் உள்ளது. இப்போது நான் மூன்றாம் நபருக்கு அதனை எழுதி வைக்க முடியுமா ?

ஏன் முடியாது. நிச்சயமாக மற்றொவருக்கு எழுதி வைக்க முடியும். கிரையம் செய்வதற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: Ec Villangam