பட்டா சிட்டா பாக்கணும் தற்போது திறந்துள்ளது

பட்டா சிட்டா பாக்கணும் தற்போது திறந்துள்ளது தற்போது திறந்துள்ளது சிறந்த மதிப்பீடு பெற்றவை online free download - முதலில் பட்டா எவ்வாறு செயல்படுகின்றது அதன் பயன்கள் மற்றும் சிட்டா என்பது என்ன பற்றி பார்க்கலாம். பட்டா என்பது ஒரு நில உரிமையாளர் சம்பந்தப்பட்ட நிலத்தையோ அல்லது இடத்தையோ உறுதிப்படுத்தக்கூடிய ஆவணமாக உள்ளது. அதாவது இன்னார் தான் இந்த மனைக்கு அல்லது நிலத்திற்கு சொந்தக்காரர் என உறுதிப்படுத்த காட்டக்கூடிய ஆவணமாக இந்த பட்டா உள்ளது.

சிட்டா என்பது ஏறக்குறைய ஒன்று தான். இதில் மிகவும் துல்லியமாக ஒரு குறிப்பிட்ட வருவாய் கிராமத்தில் ஒருவரின் நிலங்கள் எங்கெங்கு உள்ளன மற்றும் அதன் தன்மை இதில் நாம் பார்க்க இயலும்.

இதையும் படிக்கலாமே: பட்டா சிட்டா வில்லங்கம்

பட்டாவில் என்னென்ன உள்ளது என பார்க்கலாம்

1. பட்டா எண் ( 2234 )

2. சர்வே எண் ( 32, 20, 4, 600 )

3. உட்பிரிவு எண் ( 23/A1 )

4. தந்தை, மகன், கணவன் அல்லது மனைவி பெயர்

5. வருவாய் கிராமம்

6. வருவாய் வட்டம்

7. வருவாய் மாவட்டம்

8. தீர்வை

9. குறிப்புரைகள்

10. நிலத்தின் அளவுகள்

1. பட்டா எண்

நமது பட்டாவில் 223, 2241 என மூன்று அல்லது நான்கு இலக்க எண்கள் கொண்ட வடிவில் எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை தான் நாம் பட்டா எண் என்கிறோம். ஒரு பட்டா எண்ணில் எண்ணற்ற சர்வே எண்கள் கொடுக்கப்படலாம். அதாவது பிரிக்கப்படலாம்.

இதையும் படிக்கலாமே: தமிழ்நிலம்

2. சர்வே எண்

முப்பது வருடத்திற்கு ஒருமுறை வீதம் என அரசாங்கத்தினால் சர்வே செய்யப்படும். அப்படி செய்யப்படும் நிலங்களுக்கு சர்வே எண்கள் கொடுப்பது வழக்கம். அதனை வைத்து தான் துல்லியமான அளவுகளை நாம் காண முடியும்.

3. உட்பிரிவு எண்

இது சர்வே எண் பக்கத்தில் கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக 21/A என இருந்தால் 21 தனி நிலமாகவும் 21/A இன்னொரு தனி நிலமாகவும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

4. பெயர்கள்

நில உரிமையாளர் அல்லது நில உரிமையாளர்களின் பெயர்கள் முதல் வரிசையிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். அதிலும் மகன் வாங்கி இருந்தால் அவரின் தந்தை பெயரும்,  அவரின் தந்தை வாங்கி இருந்தால் அவருடைய தந்தை பெயரும், மனைவி பெயர் இருந்தால் அவரின் கணவர் பெயரும் கொடுக்கப்படும்.

5. வருவாய் கிராமம்

ஒரு வருவாய் கிராமம் என்பது பல பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது ஆகும். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் செயல்படுவார். இவர் பட்டா, சிட்டா, அ பதிவேடு, பயிராய்வு மற்றும் இதர பணிகளை மேற்கொள்வார்.

6. வருவாய் வட்டம்

எப்படி ஒரு வருவாய் கிராமம் மற்ற கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கியதோ அதேபோல் தான் இந்த வட்டமும் ஆகும். அதாவது பல வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது தான் இந்த வட்டமாகும். இதன் கீழ் பணிபுரிய தாசில்தார், வருவாய் ஆய்வாளர், மண்டல தாசில்தார் அவர்கள் இருப்பார்கள். கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் பரிந்துரைக்கின்ற டாக்குமெண்ட்ஸ் அனைத்தும் இவர்கள் தான் உறுதிப்படுத்துவர்.

7. வருவாய் மாவட்டம்

மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டம் என்பது ஒன்றே தான். வருவாய் துறை சார்ந்த அனைத்து வேலைகளையும் அனைத்தும் நடைமுறைபடுத்துவதே இந்த வருவாய் மாவட்டத்தின் வேலையாகும். உதாரணமாக கருணை அடிப்படையில் வேலை, லேண்ட் சீலிங், இலவச லேண்ட், பட்டா மாற்றம் இதர வேலைகளை நடைமுறைபடுத்துவதே இதன் முக்கிய அம்சமாகும். இதனை பாதுகாக்க இந்திய ஆட்சி பணியில் உள்ள கலெக்டர் அவர்கள் தான் செயல்படுத்துவார். இவருக்கு கீழ் பணிபுரிய சப் கலெக்டர், கோட்டாட்சியர் அவர்கள் பணிபுரிவர்.

இதையும் படிக்கலாமே: Fmb sketch

8. தீர்வை

தீர்வை என்பது ஒரு விதமான வரி ஆகும். எப்படி நாம் வாழும் வீட்டிற்கு சொத்து வரி, மின்சார வரி இருக்கின்றதோ அதேபோல் தான் இந்த வரியாகும். நிலத்திற்கு என வரி ஒன்றுஇருக்கும். அதனை தான் தீர்வை என்கிறோம். இந்த தீர்வை நிலத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். மேலும் மற்ற வரிகளை கம்பேர் செய்கையில் மிகவும் குறைவே.

9. குறிப்புரைகள்

ஒவ்வொரு பட்டாக்களிலும் இதனை நாம் காண இயலும். வலது பக்க கடைசியில் அல்லது பட்டாவில் இறுதியில் தோன்றும். அதாவது நீங்கள் காண்கிற பட்டா ஒரிஜினல் தான என verify செய்து கொள்ள இது உதவும். மேலும் அந்த குறிப்புரை எண் வைத்து கொண்டு பட்டா நகல் எடுத்து கொள்ள முடியும்.

10. நிலத்தின் அளவுகள்

ஒரு பட்டா என எடுத்து கொண்டால் நிச்சயம் அளவுகள் என்று ஒன்று இருக்கும். ஏனெனில் எவ்வளவு அளவுகள் இருக்கிறது என பயனாளிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வருவாய் துறையானது அதில் கொடுத்திருப்பார்கள். உதாரணமாக 0 - 0.23 ( ஹெக் - ஏர் ) என காட்டும். பொதுவாகவே இந்த மாதிரியான அளவீடுகள் தான் இருக்கும். ஏனெனில் சர்வே செய்கின்ற சர்வேயருக்கு இந்த அளவீடுகள் மிகவும் துல்லியமான அளவினை தரும் என்று கூறுவதுண்டு. ஆனால் பயனாளிகளுக்கு மிகவும் சிரமாக இருக்கும். அதனால் வருகின்ற விடையினை 2.47 ஆல் பெருக்கி எடுத்தால் சென்ட் கணக்கில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வில்லங்கம்

வாசகர்களின் கேள்விகள்

1. பட்டாவில் பிழை உள்ளது என்ன செய்ய வேண்டும் ?

முதலில் எந்த பிழைகள் என்று பார்க்க வேண்டும். எழுத்து பிழைகள் என்றால் உடனடியாக வி ஏ ஓ இடம் சென்று மாற்றி கொள்ளலாம். ஆனால் இதர பிழைகள் என்றால் சம்பந்தப்பட்ட ஆவணங்களான பத்திரம், வரைபடம் இவைகள் எடுத்து செல்ல வேண்டும். இவற்றுக்கான கால அவகாசம் 15 நாட்கள் முதல் 30 நாட்கள் ஆகும். இந்த நாட்களுக்குள் வரவில்லை எனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்தி என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.

2. பத்திரம் கிரையம் செய்துவிட்டேன். பட்டாவை பெயர் மாற்றம் செய்ய மறந்து விட்டேன். தற்போது ஆன்லைனில் போட்டு பார்த்தால் வேறு ஒருவர் பெயர் உள்ளது. இதனை எவ்வாறு நீக்கம் செய்வது ?

சிறிது காலம் என்றால் மோசடி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கையில் சில ஆண்டுகளாக பட்டாவை பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தால் நிச்சயம் மோசடி செய்ய வாய்ப்புள்ளது. ஆதலால் Tnreginet.gov.in வெப்சைட்டில் கடந்த ஐந்து வருடங்களில்நடந்த சொத்து பரிமாற்றத்தை நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். அப்படி உறுதி ஆகி விட்டால் நில மோசடி புகார் மனு ஒன்றினை காவல் நிலையத்தில் கொடுங்கள்.

3. என்னிடம் இருந்த பட்டா ஒரிஜினல் தொலைந்துவிட்டது தற்போது ஒரு நகல் அவசரமாக தேவைப்படுகின்றது. உடனடியாக எடுக்க முடியுமா ?

நிச்சயம் எடுக்க முடியும். Eservices.tn.gov.in வெப்சைட்டில் ஒரு ரூபாய் செலவில் எடுத்து கொள்ள முடியும்.