Tnreginet வழிகாட்டி மதிப்பு 2025 தமிழ்நாடு pdf பதிவிறக்கம் ( Tnreginet valikatti mathippu pdf download ) - Tnreginet வெப்சைட் என்பது பதிவுத்துறைக்கான ஒரு இணையதளம் ஆகும். இதில் பதிவுத்துறை சார்ந்து உள்ள விஷயங்கள் மட்டுமே நடக்கும். உதாரணமாக கிரையம், உயில், வில்லங்கம், தான செட்டில்மென்ட், தானம், பரிவர்த்தனை, குத்தகை என பல்வேறு காரணங்களுக்காக இதனை நாம் உபயோகிக்கின்றோம்.
அதுமட்டுமல்லாமல் வில்லங்கம் அதாவது ஒரு நில உரிமையாளரின் சொத்து பரிவர்த்தனை பார்க்கவும் இது உதவுகிறது. பரிவர்த்தனை என்றால் ஆரம்பம் சொத்து வாங்கியது முதல் கடைசியாக வாங்கிய சொத்து வரை இதில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். மேலும் சீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் பதிவும் இதில் செய்து கொள்ளலாம்.
மேலே உள்ளது மட்டுமல்லாமல் முக்கியமாக வழிகாட்டி மதிப்பும் இதில் இருக்கிறது. என்னதான் மற்ற பரிவர்த்தனைகள், பதிவு, வில்லங்கம் இருந்தாலும் ஒரு சொத்தின் வழிகாட்டி மதிப்பு தெரியாமல் அல்லது இல்லாமல் ஒரு நிலத்தினை யாரும் வாங்க முன்வரமாட்டார்கள்.
மேலும் படிக்க: பட்டா சிட்டா புலப்படம் download in tamil
முதலில் வழிகாட்டி மதிப்பு என்றால் என்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். வழிகாட்டி மதிப்பு என்றால் ஒரு நிலத்தின் தற்போதைய மதிப்பு அல்லது சந்தை மதிப்பினை சொல்வது ஆகும். இரண்டு வகைகளாக இதனை நாம் பிரித்து கொள்ள முடியும். ஒன்று சந்தை மதிப்பு மற்றொன்று அரசு மதிப்பு.
சந்தை மதிப்பு
பக்கத்தில் உள்ள நிலங்கள், பக்கத்துக்கு ஊரில் அல்லது நகரத்தில் என்ன விலை போகின்றது என்பதன் அர்த்தம் தான் இந்த சந்தை மதிப்பாகும்.
அரசு மதிப்பு
நிலத்தின் தன்மை பொறுத்து அரசாங்கமானது ஒரு விலையினை நிர்ணயிக்கும். இது நிலத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். உதாரணமாக குடியிருப்பு வகைகள், வணிக ரீதியான வகைகள், தரிசு நிலங்கள் என ஒவ்வொன்றிக்கும் விலை மாறுபடும். இதன் மதிப்பினை தான் பதிவுத்துறையானது Tnreginet இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டிருப்பார்கள். இதன் அப்டேட் செய்யப்படுகின்ற விலை அதாவது மதிப்பினை கட்டாயமாக பதிவுத்துறையில் செலுத்த வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நத்தம் பட்டா
எடுத்துக்காட்டு 1
ஒரு நிலம் ரூபாய் 20, 00, 000 ரூபாய் என்றால் அதற்கு ஏழு முதல் பத்து சதவீதங்கள் வரை பதிவுத்துறையில் நில உரிமையாளர் கொடுக்க வேண்டும். இது பத்திரத்தை பொறுத்து மாறுபடும். உதாரணமாக தான செட்டில்மென்ட் என்றால் மொத்தமாக நான்கு சதவீதம் மட்டுமே கட்ட நேரிடும். இதே கிரையம் என்றால் 10 சவீதம் மேலாக கட்டணம் செலுத்த நேரிடும்.
வழிகாட்டி மதிப்பு கண்டுபிடிப்பது எப்படி
முதலில் Tnreginet.gov.in என்கிற இணையதளத்தில் செல்லவும். பின்பு மண்டலம், சார்பதிவாளர் அலுவலகம், பதிவு கிராமம் மற்றும் சர்வே எண்களை உள்ளீடு செய்தால் தெருக்கள் பெயர்கள் காண்பிக்கப்படும். ஒவ்வொரு தெரு பெயரின் பக்கத்தில் எவ்வளவு சதுர அடி, சதுர மீட்டர், தன்மை மற்றும் வழிகாட்டி மதிப்பு ஆண்டு என பல்வேறு விஷயங்கள் இருக்கும்.
உதாரணமாக,
மண்டலம் - கடலூர்
கிராமம் - கொரலுர்
சார்பதிவாளர் அலுவலகம் - அன்னியூர்
வருவாய் வட்டம் - விக்கிரவாண்டி
மாவட்டம் - விழுப்புரம்
தெருக்கள்
1. புது காலணி - 56 சதுர அடி
2. வீரன் கோயில் தெரு - 66 சதுர அடி
3. விநாயகர் கோவில் தெரு - 66 சதுர அடி
4. 4 வது தெரு - 66 ச. அ
5. லோகநாதன் நகர் - 66 ச. அ.
வழிகாட்டி மதிப்பு தொடக்கம் முதல் இன்று வரை
1. 01.04.2002 முதல் 31.03.2003
2. 01.04.2003 முதல் 31.07.2007
3. 01.08.2007 முதல் 31.03.2012
4. 01.04.2012 முதல் 08.06. 2017
5. 09.06.2017 முதல் 31.03.2023
6. 01.04.2023 முதல் 30.06.2024
7. 01.07.2024 முதல் -------------
மேலே உள்ள ஆண்டுகள் அடிப்படையில் தான் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இனி வருகின்ற காலங்களில் 01.07.2024 அடிப்படையில் விலைகள் அதாவது மதிப்பு தீர்மானிக்கப்படும்.